என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காமராஜர் பிறந்த நாள் விழா
நீங்கள் தேடியது "காமராஜர் பிறந்த நாள் விழா"
திருச்சி தாராநல்லூரில் நாளை காமராஜர் பிறந்த நாள் விழா நடக்கிறது.இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.
திருச்சி:
தமிழ்மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட பாரத பெருந்தலைவர் காமராஜர் பேரவை மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை, செக்கடி பஜாரில் நாளை ( 22 ந் தேதி) மாலை 3 மணிக்கு 21-ம் ஆண்டு தொடக்க விழா கல்வி நிதி வழங்கும் விழா, காமராஜர் 116-வது பிறந்த நாள் விழா நடத்துகிறது.
விழாவையொட்டி கல்வி நிதி மற்றும் நோட்டுகள், வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. பேரவை செயலாளர் டி.நாகராஜன் வரவேற்றுப் பேசுகிறார். நிறுவனத் தலைவர் வே.மூர்த்தி தலைமை தாங்குகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா கே.செந்தில்வேல் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், மாரியப்பா ஸ்டோர் பழனிக்குமார் நிதி வழங்குகிறார்கள். விழாவில் த.மா.கா. மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கல்விநிதி, நோட்டுகள், உபகரணங்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கி பேசுகிறார்.
த.மா.கா வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா, நிர்வாகிகள் பி.எல்.ஏ. சிதம்பரம், புலியூர் நாகராஜன், பேரவை நிர்வாகிகள் ராஜாங்கம், ஏசுவடியான், டி.சரவணன், முருகேசன், பழக்கடை சரவணன், எஸ்.ராஜன், ரவி , செல்வமுருகன், விஜய், பிரபாகர், மாரீசன் த.மா.கா. நிர்வாகிகள் கொட்டப்பட்டு சண்முகம், இண்டர்நெட் ரவி, செயற்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், அனந்தராஜா, மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விழாவில் மாநகர மாவட்ட நிர்வாகிகள், கோட்டத் தலைவர்கள் ,வார்டு தலைவர்கள், மற்றும் பல்வேறுஅணியினர், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
கூடிய விரைவில் ஜெயக்குமாரும் அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி என்று காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #Kamarajarbirthday #EVKSElangovan
சென்னை:
சென்னையை அடுத்த புழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் வகையில் வாழ்ந்து இன்னும் வழிகாட்டியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.
யார் காமராஜர்? என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் வடிவில் தான் காமராஜர் உள்ளார். காங்கிரஸ்காரர்களால் மட்டுமே பொற்கால ஆட்சியை தர முடியும்.
நாங்கள் எல்லாம் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து வலதுபுறமாக திரும்பி பொதுக்கூட்ட மேடையில் இருக்கிறோம்.
கூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் சிலர் குறிப்பாக ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வழியாக போலீஸ் வேனில் வருவார்கள். இடது புறமாக திரும்பி ஜெயிலுக்குள் செல்வார்கள்.
காங்கிரசுக்கு சமாதி கட்டுவதாக பேசுகிறார்கள். கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அவர்களுக்கு தெரிந்தது உண்மைகளை புதைப்பது தான். அதனால் தான் காங்கிரசுக்கு சமாதி கட்டுவோம் என்கிறார்கள். அது முடியுமா உங்களால்?
தம்பிதுரை தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும் இடமில்லை என்கிறார். அவரைப் போன்றவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது காங்கிரசின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.
விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியதாவது:-
காமராஜரை போன்ற எளிமையான தலைவர்களை காங்கிரசில் மட்டுமே பார்க்க முடியும். தியாகம் செய்து வளர்ந்த கட்சி காங்கிரஸ்.
தமிழகத்தில் தொண்டர்களின் தலைவராக இளங்கோவன் இருக்கிறார். அவரிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பையும், தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் தகுதி படைத்த தலைவர் இளங்கோவன் தான்.
மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். ஆனால் வங்கிகளில் இருக்கும் பணத்தை தான் பிடுங்குகிறார்கள். பா.ஜனதா ஆட்சியின் சாதனை என்பது மக்கள் படும் வேதனைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வீ.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், நாசே.ராஜேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலமுருகன், கடல் தமிழ்வாணன், எம்.பி.குணா, உள்பட பலர் கலந்து கொண்டனர். #Kamarajarbirthday #EVKSElangovan

இவ்வாறு அவர் பேசினார்.

×

X